05_36. த்விவித ஸம்ஹாரம்
த்விவிதன் ஒரு வானரன். ராம ராவண யுத்தத்தில் வானர ஸைன்யத்தில் பெரும் பங்காற்றியவன். வாலியின் மனைவியான தாரையின் ஸஹோதரனிவன். அம்ருதம் கடைந்த போது தேவர்களை பயமுறுத்தி அம்ருதத்தை உண்டவன். நரகாஸுரனின் நண்பன்! தேவர்களால் நரகாஸுரன் கொல்லப்பட்டதை அறிந்த இவன் வேதாத்யயனத்திற்கும், யாகாதி கர்மங்களுக்கும் இடையூறு செய்ய ஆரம்பித்தான். அனைவரையும் துன்புறுத்தினான். மலை, மரம் முதலானவைகளை பெரும் பலத்தால் கடலினில் எறிந்தான். காடுகள் அழிந்தன. கடல் கொந்தளித்தது.
அப்படி ஒரு ஸமயம் த்வாரகையின் அருகில் இருந்த ரைவதகம் என்ற மலையில் பலராமர் மது அருந்திவிட்டு அவர் மனைவிகள் ரேவதி முதலானவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில் அங்கு வந்து அவரைக் கோபிக்கச் செய்து, தனது தர்மத்திற்கு ஒப்பாத செயல்களால் அவன் அருந்திய அம்ருதமும் பயன்படாது பலராமர் கையால் அடிபட்டு அவன் மைத்துனன் வாலியைப் போலவே இறந்தொழிந்தான். அப்போது தூக்கியெறியப்பட்ட அவனது உடல் ஒரு மலையின் மீது விழுந்து அதுவும் பொடிபட்டது.

No comments:
Post a Comment