06_01 கலியுக தர்மம்
ஸ்ருஷ்டி, அரச வம்சங்கள், மன்வந்த்ரங்கள் இவைகளை இதுவரை பராசரரிடமிருந்து கேட்டு மகிழ்ந்த மைத்ரேயர் கல்பத்தின் முடிவில் (ப்ரஹ்மாவின் பகல்) நிகழும் மஹா ப்ரளயத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்கிறார்.
"க்ருத, த்ரேதா, த்வாபர, கலி என்று யுகங்கள் நான்கு. மனிதர்களின் ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள். மனிதர்களின் ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். இப்படி நமது இரண்டாயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவுக்கு ஒரு நாள் (கல்பம்). ஒவ்வொரு கல்பத்தின் முதல் க்ருதயுகத்தையும், முடிவான கலியுகத்தையும் விட்டு மற்ற சதுர்யுகங்கள் யாவும் அளவு, தர்மாதர்மங்களில் சமமாகவே இருக்கும்" என்று கூறிக்கொண்டிருக்கும் போதே மைத்ரேயர் கலியின் லக்ஷணங்களைக் கூறுமாறு கேட்கிறார்.
"கலியுகத்தில் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர முதலான வர்ணங்களும், அவற்றிற்குரிய ஆசாரங்களும் கெடும். நான்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள க்ரியைகள் நடக்காது. தர்ம விரோதமாகக் கல்யாணங்கள் நடக்கும். குரு-சிஷ்ய, கணவன்-மனைவி உறவுகளில் தர்மங்கள் அழியும். அக்னி கார்யங்களும், தேவ பூஜைகளும் கெடும். பலம் உள்ளவன் அரசனாவான். கன்னிகையை மணக்க வர்ணம், ஜாதி, கல்வி, ஒழுக்கம் எதுவும் தேவையின்றி பணமிருப்பவனே வரனாவான். ப்ராஹ்மணன் எந்த தகுதியுமின்றி தீக்ஷிதனாவான். சாஸ்த்ரங்களில் விதிக்கப்படாத க்ரியைகள் ப்ராயச்சித்தமாக ஏற்கப்படும். ப்ரியமான வார்த்தைகளே சாஸ்த்ரங்களாகும். அவைதீகமான காளி முதலான தேவதைகளையே அனைவரும் வணங்குவர். ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ ஆச்ரமங்கள் கெடும். வைராக்யமில்லாமலேயே எவரும் எந்த ஆச்ரமத்தையும் கொள்வர்.
சாஸ்த்ரத்தை அனுஸரிக்காமல் தங்கள் இஷ்டப்படி உபவாஸம், தீர்த்த யாத்ரை, தானங்களைச் செய்வர். கொஞ்சம் பணம் இருப்பவனும் செருக்கடைவான். கூந்தல் அழகை மட்டும் கொண்டே பெண்கள் தங்களை அழகிகளாகக் கர்வம் கொள்வர். தங்கம், மணி, ரத்னங்கள், துணி முதலானவை குறைந்து அழிந்து போகும். இவைகளின்றி பெண்கள் கூந்தலாலேயே தங்களை அலங்கரித்துக் கொள்வர். பெண்கள் பணமில்லாத கணவனை விட்டு, பணம் வைத்திருப்பவனைக் கணவனாகக் கொள்வர். நல்ல குடும்பம், ஞானம் இவைகளை விட்டு நிறைய பணம் கொடுப்பவனையே ஆண்டவனாகக் கொள்வர். புத்தியை ஆத்ம ஞானம் அடைவதில் செலுத்தாது, எவரும் பணம் சம்பாதிப்பதற்கே செலுத்தி, கிடைத்த பணத்திலும் யாகாதி கர்மங்களைச் செய்யாது வீடு கட்டுவதற்கே செலவழிப்பர். அந்த வீடுகளும் அவர்களுக்கும், அதிதிகளுக்கும் பயன்படாத வகையிலேயே இருக்கும்.
அழகான ஆடவர்களையே விரும்பி பெண்கள் வேசிகளாவர். அதர்ம வழியில் சம்பாதித்திருந்தாலும், அவனிடமே மக்கள் விரும்பிச் செல்வர். நெருங்கிய நண்பன் கெஞ்சிக் கேட்டாலும் சுயநலத்தால் உதவ மாட்டார்கள். தாழ்ந்தவர்கள் ப்ராஹ்மணர்களை மதிக்க மாட்டார்கள். ஜாதியைக் கொள்ளாது பால் தருவதாலேயே பசுவும் கொண்டாடப்படும். மழை பொய்த்துப் போகும். இதனால் எவரும் உணவின்றி முனிவர்களைப் போல் வேர், கிழங்கு, கனிகளையே உண்டு பின் அதுவும் கிடைக்காமல் பசியால் தற்கொலை செய்து கொள்வர். சந்தோஷமும், சௌக்யமும் ஜனங்களிடையே கெடும். எங்கும் பஞ்சமும், துன்பமுமே மிகும். ஆசாரங்கள் கெடும், குளிக்காமலேயே சாப்பிடுவர். தேவ, பித்ரு, அதிதி பூஜைகள் அழியும்.
பெண்கள் நிறைய உண்டும், மெலிந்தும், பேராசையோடும் இருப்பார்கள். நிறைய குழந்தைகள் பிறந்தும் ஏழ்மையில் வாடுவார்கள். இரண்டு கைகளாலும் தலையை சொரிந்து கொள்வர். மாமனார், மாமியார் வார்த்தைகளைக் கேளார். சுயநலமும், கோபமும், தாழ்வு மனப்பான்மையும் மிகுந்து தீய சொற்களையே பயன்படுத்துவர். நல்ல குடும்பத்துப் பெண்களும் தீயவர்களிடம் ஆசை கொண்டு தங்கள் கணவனுக்கே பல கெடுதிகளைச் செய்வர்.
ப்ரஹ்மசாரிகள் வ்ரதங்கள், அனுஷ்டானங்களின்றியே அத்யயனம் செய்வர். க்ருஹஸ்தர்கள் ஹோம, தானாதிகளைச் செய்யார். வானப்ரஸ்தர்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு, பழ வகைகளை உண்ணாது அருகிலுக்கும் க்ராமங்களுக்குச் சென்று அங்கு கிடைப்பவைகளை உண்பர். ஸன்யாஸிகள் பெற்றோர், உடன்பிறந்தோரை விட்டு வந்தும், புதிதாக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் வசமாகி விடுவர்.
அந்யாயமாக வரி என்ற பெயரில் அரசர்கள் பணம் பறித்தும், மக்களை நன்கு போஷிக்க மாட்டார்கள். வ்யாபாரிகளின் பணத்தைப் பறித்துக் கொள்வர். ஸேனை உள்ளவனே அரசனாவான். அரச குலத்தோனும் பலமின்றி ஸேவித்து ஊழியம் செய்வான். மேல் வர்ணத்தோர் அவர்களுக்கு அடுத்த தாழ்ந்த வர்ணத்தாரின் தொழிலை மேற்கொள்வர். நான்காம் வர்ணத்தவர் மேல் வர்ணத்தாரின் தொழில் செய்து ஜீவிப்பர்.
அரசர்களின் உபத்ரவம் தாங்காது மக்கள் வேறு நீச ராஜ்யங்களுக்கு சென்று வசிப்பர். வேத மார்க்கம் மறைந்து பாஷண்டிகள் மலிவர். அதர்மம் அதிகரிக்கும். முறை தவறிய அரசுகளால் மக்களும் முறை தவறுவர். வீணான தவங்களைச் செய்து இளமையிலேயே மரணமடைவர். ஆயுசு குறையும். பெண்கள் ஐந்து, ஆறு வயதிலேயே குழந்தை பெறுவர். ஆண்கள் எட்டு, ஒன்பது வயதிலேயே ப்ரஜா வ்ருத்தி செய்யும் சக்தியைப் பெறுவர். பன்னிரண்டாவது வயதில் தலை நரைத்து, இருபது வயதுக்கு மேல் வாழமாட்டார்கள்.
அறிவு குறைந்து, வைதீக வேஷம் அதிகரிக்கும். தீய எண்ணத்தால் விரைவிலேயே மக்கள் அழிவர். தர்ம கார்யங்கள் பாதியிலேயே தடைபடும். இவைகளாலேயே புத்திசாலிகள் கலி வளர்வதை அறிந்து கொள்வர். பாஷண்டிகளால் மதி மயங்கிய மக்கள் விஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள்.
தெய்வம், வேதம், ப்ராஹ்மணர்களால் யாருக்கு என்ன பயன்? நீரால் செய்யப்படும் புண்யாஹவாசனங்கள் எதற்கு? என்ற கேள்விகள் மிகும். மழையும், விளைச்சலும் குறையும். கோணி போன்ற ஆடைகளை அணிவர். மரங்கள் யாவும் வன்னி மரங்களைப் போல் மலிவடையும். யாவரும் சூத்ர ஜாதியைப் போலிருப்பர். தான்யங்கள் சிறுத்து விடும். பால் நெய் போல இருக்கும். சந்தனம் கோரைக் கிழங்கு போலாகும். கிடைப்பது அரிதாகும். ஆண்கள் மாமனார், மாமியார்களையே மதிப்பர். மைத்துனர்களுக்கும், அழகிய மனைவியை உடையவர்களுக்கும் மதிப்பு ஏற்படும். யார் தாய்? யார் தகப்பன்? என்று தத்வங்களைக் கூறுவர். மனதாலும், வாக்காலும், உடலாலும் தினந்தோறும் மக்கள் பாவங்களையே செய்வர். சத்யமும், தூய்மையும், தகாத செயல்களில் வெட்கமும் அழியும். தர்மம் எங்கோ ஒளிந்து கொண்டு வசிக்கும்.
இந்தக் கொடுமைகளால், க்ருத யுகத்தில் தவத்தால் அடையும் பயன், கலியுகத்தில் நாம ஸங்கீர்த்தனம் முதலிய சிறு முயற்சிகளிலேயே கிடைக்கும்.

No comments:
Post a Comment