Wednesday, January 27, 2010

விஷ்ணு புராணம் - 55

03_17. நக்னன் என்றால் யார் என்கிறார் மைத்ரேயர். "ஆடையில்லாதவனையே உலகத்தார் நக்னன் என்கிறார். ஆனால் ச்ராத்தத்தின் போது இருக்கக் கூடாதவனான நக்னன் என்பவன் வேறு. ரிக், யஜுர், ஸாம வேதங்களே மூன்று வர்ணத்தாருக்கும் ஆடையும், ரக்ஷையும் ஆகும். அதை விட்டவனே நக்னன். என் பிதா வஸிஷ்டர் பீஷ்மருக்கு முன்பொரு சமயம் கூறியதைக் கூறுகிறேன். தேவாஸுர யுத்தம் ஒரு ஸமயம் தேவமானத்தில் நூறு வருஷம் நடந்தது. ஹ்ராதன் முதலான அஸுரர்களால் தேவர்கள் தோற்று, மஹாவிஷ்ணுவிடம் ப்ரார்த்தித்தனர். ஸ்தோத்ரத்தின் முடிவில் தோன்றிய பரமனிடம் "உன்னுடைய அம்சமேயான நாங்களும் அஸுரர்களும் அவித்யையால் வேறு வேறாகப் பார்த்துக் கொள்கிறோம். அவர்களை அழிக்க வேண்டுகிறோம்.

ப்ரஹ்மாவின் ஆக்ஞையையும் மீறி எங்களுடைய யக்ஞபாகங்களை அவர்கள் அபஹரித்து விட்டனர். வர்ணாச்ரம தர்மங்களை அவர்கள் தவறாமல் செய்து கொண்டிருப்பதால் எங்களால் அவர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. தாங்கள் தான் இதற்கு ஒரு உபாயம் செய்ய வேண்டும். அவர்களைக் கொன்று எங்களைக் காக்க வேண்டும்" என்று தேவர்கள் ப்ரார்த்தித்துக் கொண்டனர். விஷ்ணு தன்னிடமிருந்து ஒரு மாயனை உண்டாக்கி, இவன் அந்த அஸுரர்களை வேத மார்க்கத்திலிருந்து விலக்கி விடுவான். ப்ரஹ்மனின் ஆணையை மீறியவர் எவரும் தண்டிக்கத்தக்கவரே. வேத வழியிலிருந்து விலகியவர்களை நீங்கள் எளிதில் அழித்து விடலாம்" என்று அருளினார். அவ்வாறே அவனை முன்னிட்டுக் கொண்டு, அஸுரர்களை வென்றனர் தேவர்கள்.

No comments:

Post a Comment